இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

10 மணி நேரம் மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

விவசாயத்திற்கு பகலில் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் துணை மின் நிலையம் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


உண்ணாவிரத போராட்டத்திற்கு கே.சிதம்பராபுரம் பஞ்., தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க துணை தலைவர் சுப்பையா மற்றும் கயத்தாறு வியாபாரிகள் சங்க தலைவர் கொண்டல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் நாகராஜா போராட்டத்தை துவக்கி வைத்தார். பகலில் விவசாயத்திற்கு 10 மணி நேரம் மும்முனை மினசாரம் வழங்க வேண்டும். பழுதான மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் மற்றும் மின்வெட்டால் குடி நீருக்கு அவஸ்தைப்படும் பொதுமக்களை காக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பன்னீர்குளம் பஞ்., தலைவர் சிவபாண்டி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் கடம்பூர், கே.சிதம்பராபுரம், பன்னீர்குளம், நொச்சிகுளம், திருமலாபுரம், அகிலாண்டபுரம், வீரபாண்டிபுரம், தாழையுத்து, கூட்டுப்பண்ணை ஆகிய கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment