இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

'கள்' இயக்கம் ஆலோசனை

'பட்ஜெட்டில் கள்ளுக்கு தடை நீக்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால், விவசாய மானிய கோரிக்கை நடக்கும் நாளன்று, சென்னையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு 'கள்' இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது; அமைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 'டாஸ்மாக்' மதுபானங்களை பனை, தென்னை பொருட்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்க வேண்டும்; உள்நாடு, வெளிநாடு நட்சத்திர ஓட்டல் மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் சந்தைப்படுத்த வேண்டும். கள்ளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக அமைத்த குழுவினர், அறிக்கை தாக்கல் செய்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் கள்ளுக்கு எதிராக செயல்படுபவர்களை தமிழ்நாடு கள் இயக்கம் தோற்கடிக்கும்.ஜூன் மாதம் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆட்டம் பாட்டம் மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது. தமிழ் மேன்மையும், வளர்ச்சியும் அடைய வேண்டும். மேலும், மாநாட்டு வளாகத்திற்குள் கள் விற்கப்படும்.கள்ளுக்கு தடை நீக்குவது குறித்து, தமிழக பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. விவசாய மானிய கோரிக்கை நடக்கும் நாளில் சென்னையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அரசியல் தலைவர்கள் கழுத்தில் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டு விழா கொண்டாடுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். பப்பாளி, இலவன், மரவள்ளி, கொய்யா உள்ளிட்ட பயிர்கள் வெள்ளை பூச்சி தாக்குதலுக்கு உட்படுவதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment