பால் கொள்முதலுக்கான விலையைஉயர்த்த கோரி 26ம்தேதி ஆர்ப்பாட்டம்:உற்பத்தியாளர் சங்கம் முடிவு
1:34 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 5ம், எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 8ம் விலை உயர்த்தி அரசு வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாவட்டத் தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முகமதுஅலி வரவேற்றார்.தீர்மானங்கள்: இந்த ஆண்டு கால்நடை தீவன விலையும், கறவை மாடுகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 5ம், எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 8ம் விலை உயர்த்தி வழங்க வேண்டும்.
தற்போது செயல்படும் பல கூட்டுறவு சங்கங்கள் நசிந்து மூழ்கிடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மற்ற துறைகளுக்கு மான்யம் வழங்குவது போல் கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 2 மானியம் வழங்க வேண்டும்.அண்ணாதுரை நூற்றாண்டு விழா மகளிர் பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் தஞ்சை பால் கூட்டுறவு ஒன்றியம் மூலம் 25 ஆரம்ப சங்கங்களுக்கு அமல்படுத்த அரசு அறிவித்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்து தஞ்சை பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு வரும் 26ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுரவத் தலைவர் சாமிநடராஜன், செயலாளர் துரைராஜ், ரத்தினம், துரைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது