இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தோட்டக்கலை சாகுபடிக்கு 50% மானியம்: புதுக்கோட்டை உதவி இயக்குனர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடிக்கு தேவையான பழமரக் கன்றுகள், காய்கறி விதைகள் மற்றும் மண்புழு உரம், ரசாயன உரம் போன்றவற்றை 50 சதவீத மானிய விலையில் வழங்க தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள, நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.திசு வாழை, சவுக்கு, மா, நெல்லி, பலா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழமரங்களின் வீரிய ஒட்டு மரக்கன்றுகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை பொறுத்தமட்டில் வெண்டை, கத்திரி, பூசணி, பறங்கி ஆகியவற்றின் வீரிய ஒட்டு விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். இதுபோன்று பயிர் சாகுபடிக்கு தேவையான மண்புழு உரம், ரசாயன உரம், பயிர் பாதுகாப்பு மருந்து, இடுபொருள் போன்றவையும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். தோட்டக்கலைப் பயிர் சாகுபடிக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. எனவே, தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment