இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சத்தி பகுதியில் கடும் வெப்பம் : மல்லிகை பறிக்கும் பணி பாதிப்பு

சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான வெப்பம் வீசி வருவதால் மல்லிகை பூ பறிக்கும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சத்தியமங்கலம் பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ளனர். 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் பத்து டன் மல்லிகைப் பூ இப்பகுதியில் உற்பத்தியாகி, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா பகுதிக்கு ஏற்றுமதியாகிறது. மல்லிகைப்பூ பறிக்கும் பணியில் அதிகமாக பெண்களே ஈடுபடுகின்றனர். ஒரு படி பூ பறித்தால் ஐந்து ரூபாய் கூலியாக தரப்படுகிறது. ஒரு நாளில் சராசரியாக 30 முதல் 50 படி பூ பறிப்பர். இதற்காக இவர்கள் அதிகாலை 3 மணிக்கு மல்லிகை காட்டுக்குள் நுழைந்தால், மதியம் ஒரு மணி வரை தொடர்ந்து பூ பறிக்கின்றனர்.
தற்போது சத்தியமங்கலம் பகுதியில் காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விடுகிறது. மதியம் வேளையில் வெப்பத்தின் சூடு மிகக் கடுமையாக இருக்கிறது. மல்லிகைப் பூ பறிக்கும் பெண்கள், தண்ணீரில் நனைத்த துணியை தலையில் கட்டிக்கொண்டு பூ பறிக்கின்றனர். சில நிமிடங்களில் துணியின் ஈரம் காய்ந்து விடுகிறது. மீண்டும் தலைக்கு மேல் உள்ள துணியில் தண்ணீர் ஊற்றிக் கொள்கின்றனர். மல்லிகைப்பூ சீஸன் காலமான தற்போது நிலவும் வெயில் வெப்பத்தால், பூ பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment