இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

குட்டையாக மாறியது பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி செல்கிறது; விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் இரண்டாம் இடம் வகிப்பது பவானிசாகர் அணை. தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த அணைதான் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. அத்துடன் ஈரோடு மாவட்டம் பசுமையாக இருக்க முக்கிய பங்கு வகிப்பதும் பவானிசாகர் அணையே. ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு லட்சத்து ஏழு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
ஜனவரி 18ம் தேதி அணையின் நீர்மட்டம் 91.47 அடியாக இருந்தது. அதற்கு பின் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், அணைக்கு சொற்பளவே தண்ணீர் வரத் துவங்கியது. அதே சமயம் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரியத் துவங்கியது. ஃபிப்ரவரி 5ம் தேதி அணைக்கு வினாடிக்கு 201 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 84.61 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் கீழ்நோக்கி செல்கிறது. வருகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 290 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 73.40 அடியாக குறைந்தது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியை பார்க்க குட்டை போல் காட்சியளிக்கிறது. அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment