இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நம்பியூர் யூனியனில் 10 பஞ்.,களில் கடும் வறட்சி பனை, தென்னை மரங்களும் கருகும் அவலம்ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பனை மற்றும் தென்னை மரங்கள் கூட கருகியுள்ளன.

நம்பியூர் பஞ்சாயத்து யூனியன் வேமாண்டம்பாளையம், அஞ்சானூர், எம்மாம்பூண்டி, ஒழலகோவில், தாழ்குனி, கோசணம், கெட்டிசேவியூர், பொலவபாளையம், லாகம்பாளையம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் பருவ மழையை நம்பித்தான் விவசாயம் நடக்கிறது. நம்பியூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள பாசனக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை மரங்கள் உள்ளன. கோடைகாலத்தில் வேளாண் பயிர்கள் கைகொடுக்காத நிலையில் தென்னை மற்றும் பனை மரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுத்தன. தற்போது நிலவி வரும் வறட்சியால் பல ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த தென்னை மற்றும் பனை மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. கால்நடைளுக்கும் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.

நம்பியூர் யூனியன் பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கொடிவேரி குடிநீர் திடடம் செயல்பட்டு வந்த போதிலும் தொடர் மின்வெட்டு காரணமாக குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியால் நம்பியூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஆழ்குழாய்களில் தண்ணீர் கீழே சென்று விட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ''நம்பியூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் 29 லட்சம் ரூபாய் செலவில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் நம்பியூர் பகுதியை வறட்சி மிகுந்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்,'' என பஞ்சாயத்து யூனியன் தலைவர் நஞ்சம்மாள் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment