இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தேங்காய் உரிக்க தொழிலாளர்கள் வருகைகுறைந்தது! வேதனையில் பல்லடம் பகுதி விவசாயிகள்



பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, தேங்காய் உரிப்பு பணிக்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது; இதன் எதிரொலியாக, தோப்புகளில் மலை போல் குவிந்து கிடக்கும் தேங்காய்களை உரித்து, பணம் பார்க்க முடியாமல், விவசாயிகள் வேதனையில் தத்தளிக்கின்றனர்.பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங் களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. காய்ப்புக்கு வந்துள்ள ஒவ்வொரு தென்னை மரத்திலும் 40 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு நடக்கிறது.ஒரு மரம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 180 தேங்காய் முதல் 200 தேங்காய்கள் வரை கொடுக்கின்றன. மரத்தில் காய்ந்த மட்டையுடன் பறிக்கப்படும் தேங்காயில் இருந்து மட்டையை உரித்து, தேங்காயை வெளியே எடுக்கும் தொழிலாளர்களுக்கு, 100 காய்க்கு 40 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.பல்லடம், சுல்தான்பேட்டை வட் டாரங்களில் கடந்த மூன்றாண்டுகளாக, தேங்காய் உரிக்கும் பணிக்கு தொழிலாளர் கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. ஏனெனில், கடப்பாரை கம்பியில் நெம்பி, தேங்காயை உரிக்கும் போது, எதிர்பாராத விதமாக கம்பியில் கை, உடம்பு பட்டு விட்டால், ரத்தக்காயம் ஏற்படும். சில சமயம் பெரியளவில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது; இதனால், புதிதாக தேங்காய் உரிப்பு தொழிலுக்கு பலர் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.


பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் ஒரு வாரமாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. வெயிலால் தேங்காய் உரிப்புக்கு வருவதை, தொழிலாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வெட்ட வெளியில் இல்லாமல், தோப்பு நிழலில் குவித்து போடப்பட்டிருக்கும் தேங்காய்களில் இருந்து மட்டும் மட்டைகளை தொழி லாளர்கள் உரிக்கின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான தோப்புகளில், வெட்ட வெளியில்தான், தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.வெயில் தாக்கம் காரணமாக, தொழிலாளர்கள் தேங்காய் உரிப்புக்கு வருவதை தவிர்த்து வருவதால் 600க்கும் மேற்பட்ட தென்னந்தோப்புகளில் மட்டையுடன் கூடிய தேங்காய்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.


இதன் காரணமாக, தேங்காய்களை, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை, தூத்துக் குடிக்கு அனுப்பி, பணம் பார்க்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.பெரிய தென்னை விவசாயிகள் மட்டும் உடுமலை, அமராவதி, திண்டுக்கல் பகுதியில் இருந்து தேங்காய் உரிப்புக்கு தொழிலாளர்களை அழைத்து வருகின் றனர்; அவர்களுக்கு வழக்கத்தைவிட காய் ஒன்றுக்கு 10 காசு கூடுதலாக கூலி கொடுக்கின்றனர்; மேலும் சில சலுகை கள் செய்து தருவதாகக்கூறி தோப்புக்கு அழைத்து வருகின்றனர். நடுத்தர விவசாயி கள், தேங்காய்களை உரிய நேரத்தில் உரிக்க முடியாமல் தொடர்ந்து பாதிப் படைந்து வருகின்றனர்.தென்னை விவசாயிகளின் இப் பிரச்னைக்கு தீர்வு காண, எளிதாகவும், வேகமாகவும் தேங்காய் உரிக்கும் இயந் திரங்களை வேளாண் துறையினர் விவ சாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்; அவை குறைந்த விலையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment