கோதுமை கொள்முதல் அதிகரிக்கும்.
1:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
ரபி பருவத்தில் கோதுமை கொள்முதல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ரபி பருவத்தின் கோதுமை கொள்முதல் 1 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த பருவத்தில் மத்திய அரசு கோதுமை கொள்முதல் செய்வது 2 கோடியே 63 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற ரபி பருவத்தை விட 3.5 விழுக்காடு அதிகமாகும். சென்ற ரபி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 2.54 கோடி டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்தது.
ரபி பருவத்தின் கோதுமை கொள்முதல் குறித்து, இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான சிராஜ் ஹுசைன் கூறுகையில், இந்த பருவத்தின் முதல் வாரத்தில் மொத்தம் 13.09 லட்சம் டன் கோதுமை சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் 9.96 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளன என்று தெரிவித்தார்.
குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கோதுமை கொள்முதல் முன்னதாகவே தொடங்கி விட்டது. குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் கோதுமை கொள்முதல் செய்வது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் டன்னுக்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் தனியார் வர்த்தகர்கள் அதிக அளவு கோதுமையை கொள்முதல் செய்கின்றனர். ஹரியானாவில் தனியாரைக் விட, அரசு அமைப்புகள் அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றன.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது