இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மஞ்சள் வரத்து குறைவால் குவிண்டால் ரூ. 200 உயர்வு

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை குவிண்டாலுக்கு 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 29 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை ஏழு நாட்கள் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை மார்க்கெட் துவங்கியது. சென்ற சில வாரங்களாக மஞ்சள் விலை குவிண்டால் 12 ஆயிரத்து 900 முதல் 13 ஆயிரம் 800 வரை விற்கப்பட்டதால், அன்றைய மார்க்கெட்டுக்கு மஞ்சள் மூட்டைகள் அதிகளவில் வரும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மஞ்சள் வரத்து குறைந்தே காணப்பட்டது. மஞ்சள் சீஸன் நேரத்தில் நான்கு மஞ்சள் மார்க்கெட்டுக்கும் 5,000 முதல் 6,000 மூட்டைகள் வரத்தாகும். நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு 4,100 மூட்டைகள் மட்டுமே வரத்தானது. விரலி மஞ்சள் குவிண்டால் விலை 12 ஆயிரத்து 869, கிழங்கு மஞ்சள் குவிண்டால் விலை 12 ஆயிரத்து 484 ரூபாய்க்கு விற்றது.

நேற்றைய மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து குறைந்து 3,000 மூட்டைகள் மட்டுமே வரத்தானது. நேற்று ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு 477 மூட்டைகள் வரத்தானதில், முழுவதும் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் 12 ஆயிரத்து 905 ரூபாய், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 12 ஆயிரத்து 796 ரூபாய்க்கு விற்றது. ஈரோடு வெளிமார்க்கெட்டில் 1,647 மூட்டைகள் வரத்தானதில் 279 மூட்டைகள் விற்பனையானது. விரலி 13 ஆயிரத்து 136 ரூபாய், கிழங்கு 12 ஆயிரத்து 986 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒரே நாளில் 200 ரூபாய் வரை விலை அதிகம் கிடைத்தது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment