இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொப்பரை விலையில் தேக்கநிலை



வெளிமார்க்கெட்டில் ஒரு மாதமாக கொப்பரை விலை உயராமல், கிலோ 33.50 ரூபாய் என்ற நிலையிலேயே உள்ளதால் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது.
தேங்காய் சீசன் துவங்கியுள்ளதால், கடந்த மாதம் முதல் தேங்காய் வரத்து அதிகரித்து வருகிறது. அரசு கொப்பரை கொள்முதல் துவங்காததால், கொப்பரை மார்க்கெட்டில் மிகப்பெரிய விலை மாற்றம் ஏற்படாமல் ஒரு ரூபாய் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. காங்கேயம் மார்க் கெட்டில் கடந்த 3ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக 32.75 ரூபாயும், காய்ந்த தேங்காய் கொப் பரை கிலோவுக்கு 33.50 ரூபாயும் விலை கிடைத் தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 725 ரூபாய், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 49 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப் பட்டது.
மட்டை உரித்த ஒரு டன் தேங்காய் 9,500 ரூபாய்க் கும், காய்ந்த தேங்காய் 9,700 ரூபாய்க்கும் எடுக்கப் பட்டது. தோட்டத்தில் மரத்தில் இருந்து பறித்துக் கொள்ள ஒரு தேங்காய்க்கு 4.50 முதல் 4.75 வரை விலை கொடுக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கொப்பரை மார்க்கெட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால், வர்த்தகம் பெரியளவில் நடக்காமல் ஸ்தம்பித்துள்ளது. கடந்த இரண்டு மாதங் களாக கொப்பரை விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. குறைந்தபட்சமாக 32 ரூபாய் முதல் அதிகபட்சமாக 33.50 ரூபாய் வரையிலும் விலை கிடைத் தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 715 ரூபாய் முதல் 740 ரூபாய் வரையிலும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 47 முதல் 49 ரூபாய் வரையிலும் கிடைத்தது. மார்க்கெட் சூடுபிடிக்காததால் தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிப்பதும் ஸ்தம்பித்துள்ளது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஜனவரி துவக்கத்தில் இருந்தே கொப்பரை வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. அரசு கொள்முதல் மைய குடோன்களில் இடவசதியில்லை என்று கொள்முதலை குறைத்ததால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை உயர்வது தடைபட்டது. இந்நிலையில் பிப்ரவரி இறுதியில் இருந்து புதுத்தேங்காய் வரத்து துவங்கியுள்ளது. ஆனால் விலை உயராமல் உள்ளதால் தேங்காய் பறிப்பு, உடைப்பு போன்ற பணிகளும் சூடுபிடிக்கவில்லை. வழக்கமாக ஏப்ரல் மாத முதல் வாரத்தில் அரசு கொப்பரை கொள்முதல் துவங்கப்படும். ஆனால் இந்தாண்டு அரசு அறிவிப்பு வெளியாகியும் 'நேபட்' மற்றும் 'டான் பேட்' அதிகாரிகள் கொள் முதலை துவங்காமல் காலம் கடத்துகின்றனர். அரசு கொப்பரை கொள்முதல் துவங்கப்பட்டால் வெளிமார்க்கெட்டில் ஏற் பட்டுள்ள ஸ்தம்பிப்பு சீராகும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment