இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உடுமலை பகுதியில் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலக்கடலை


போதிய தண்ணீர் இல்லாமல் காய்ப்பு பருவத்தில் நிலக்கடலை கருகி வருவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள ஆண்டியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு விவசாயிகள் அதிகளவு நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். அர்த்தநாரிபாளையம் கிளை வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மடை எண் 29 ல் 500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மடை பாசனத்திற்கு உட்பட பகுதிகளில் பயிரிட பட்டுள்ள நிலக்கடலை செடிகள் காய்ப்பு பருவத்தில் உள்ளது.


போதிய தண்ணீர் கிடைக்காமல் காய்கள் பிடிக்காமல், கருகி வருகிறது.பருவமழை பெய்யாமல் கோடை வெப்பம் கொளுத்தி வருவதால் சாகுபடியில் வெறும் சக்கை மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. ஏக்கருக்கு இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிட்டுள்ள விவசாயிகள் செடிகள் கருகியுள்ளதால் வேதனையடைந்துள்ளனர். அடுத்த சுற்றில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் விட்டாலும் செடிகளை காப்பற்ற முடியாத நிலை உள்ளது.இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படும் சாகுபடி எந்த பலனும் தராத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நிரந்தர கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


திருப்பூர் கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள மனு:அர்த்தநாரிபாளையம் பகுதி வரையுள்ள 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலுள்ள நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. முதலாம் மண்டல பாசனம் துவங்கியதிலிருந்து கிளை கால்வாயில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முறையாக நீர் நிர்வாகத்தை செய்யவில்லை.முதல் சுற்றிலேயே கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.


இந்நிலையில் காண்டூர் கால்வாய் உடைப்பு போன்ற பல காரணங்களை தெரிவித்து பாசன நாட்களை மறைமுகமாக குறைத்து விட்டனர்.ஏழு நாள் வழங்க வேண்டிய சுற்று பாசனத்தை ஆறு நாளாக குறைத்து, பிரதான கால்வாய் ஷட்டரில் 3.2 அளவீட்டு மட்டுமே தண்ணீர் திறக்கின்றனர். காங்கேயம் பகுதி விவசாயிகள் நலனுக்காக மட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.தவறான நீர் நிர்வாகத்தால் நிலக்கடலை பயிர்கள் காய்ப்பு பருவத்தில் கருகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வரும் சுற்றுகளில் அர்த்தநாரிபாளையம் கிளை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment