திருப்பூர்- காலிபிளவர் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
9:17 AM காலிபிளவர் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விவசாயிகள் கூறியதாவது:பொங்கலூரைச் சுற்றியுள்ள மந்திரிபாளையம், வாவிபாளையம், அலகுமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான விவசாயிகள் காலிபிளவர் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்று வந்த பூ, கடந்த 20 நாட்களாக விலை குறைய துவங்கியது. ஒரு பூ ஐந்து ரூபாய் வரை விற்கிறது; இதை வாங்க ஆளில்லாமல், தேக்கம் அடைந்துள்ளது. 20 எண்ணிக்கையுள்ள காலி பிளவர் சாக்கு 110 ரூபாய் வரை விற்கிறது.விளை நிலத்தில் இருந்து சந்தைக்கு, ஒரு மூட்டை கொண்டு வருவதற்கு 40 ரூபாய் வரை செலவாகிறது.
பூ 10 ரூபாய்க்கு விற்றால், அசல் கிடைக்கும். காலி பிளவர் சீசன் முடியும் நேரத்தில் பூ விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலங்களில் அதிகமான தண்ணீர், வெயிலில் நிறம் மாறுதல் என பல பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கின்றனர். காலிபிளவர் நாற்று 35 காசுகள் வரை விற்கிறது. நாற்று நடவு செய்வதில் இருந்து, சந்தைக்கு வரும் வரை உள்ள செலவை கணக்கிட்டால், நஷ்டமே மிஞ்சும். சீசன் முடியும் தருவாயில் லாபம் எதிர்பார்த்து காத்திருப்பர்; இந்தாண்டு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.
குறிச்சொற்கள்: காலிபிளவர் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது