சிவகாசியில் 600 எக்டேர் நிலம் பயன்பெற நீர்வடிப்பகுதி திட்டம் துவக்கம்
10:22 PM சிவகாசியில் 600 எக்டேர் நிலம் பயன்பெற நீர்வடிப்பகுதி திட்டம் துவக்கம், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
சிவகாசி ஒன்றியம், நாரணாபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் மக்கள் பங்கேற்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுபாஷினி தலைமை வகித்தார். திட்ட பொருளியளார் கணேசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
இத் திட்டம் மக்கள் பங்கேற்புடன் ஏழு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். நாரணாபுரத்தில் 400 எக்டேரும், அனுப்பங்குளத்தில் 200 எக்டேர் நிலத்தை வளமாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர்வடிப் பகுதியில் உள்ள ஊரணி, ஓடைகள், வாய்க்கால்கள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும்.
இத் திட்டம் 72 லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்படும். புதிய ஊரணிகள், எட்டு பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கலாம். 60 ஏக்கரில் பழக்கன்றுகள், 50 ஏக்கரில் வறட்சியை தாங்கக் கூடிய மரங்கள் வளர்க்கப்படும். பொதுஇடமாக இருந்தால், ஏழு ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.நுழைவு முகப்பு பணி என திட்டம் துவங்கியவுடன் வேலை செய்வதற்காக, இக்கிராமத்தின் பள்ளி காம்பவுண்ட் சுவர், அனுப்பங்குளத்தில் கதிர் அடிக்கும் களம் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் மிக விரைவாக துவங்கும். இதுபோன்ற வளர்ச்சி பணிகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடைபெறும். இத் திட்டத்தில் மக்களுக்கு தேவையான பணிகளை, மக்களே தேர்வு செய்து பலன் பெறுவர், என்றார். உதவி பொறியாளர் சவுந்திரபாண்டியன், சமூகவியலாளர்கள் வரதராஜபாண்டியன், ஜெயந்தி, மணிகண்டன், கிராம பிரமுகர்கள் ராமலிங்கம், அழகர்சாமி மற்றும் நீர்வடிப்பகுதி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: சிவகாசியில் 600 எக்டேர் நிலம் பயன்பெற நீர்வடிப்பகுதி திட்டம் துவக்கம், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது