உடுமலை பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் கடும் வறட்சி! விவசாயம் பாதிக்கும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்
9:32 AM உடுமலை பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் கடும் வறட்சி விவசாயம் பாதிக்கும், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை ஏமாற்றிய நிலையில், கோடை மழையும் ஏமாற்றி வருவதால் கடும் வறட்சி நிலை நீடித்து வருகிறது.
உடுமலை பகுதி விவசாயத்தை பிரதானமா கொண்ட பகுதியாக உள்ளதாலும், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதாலும், அணைகள், நீர்ப்பாசன திட்டங்கள் உள்ளதாலும், ஆண்டு முழுவதும் குளிர்ச்சி நிலை காணப்படும். ஆனால், இந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, கடும் வெயிலும், வறட்சியும் காணப்படுகிறது. ஜூன் முதல் செப்., வரை உள்ள தென்மேற்கு பருவ மழை காலத்தில், பத்தாண்டு சராசரியாக 18 நாள் மழை; 149 மி.மீ., மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்தாண்டு 21 நாள் மழை பெய்தாலும், 72 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.
அக்., துவங்கி டிச., வரை பெய்யும், வடகிழக்கு பருவ மழை பத்தாண்டு சராசரியாக 26 நாள் மழை; 465 மி.மீ., மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்தாண்டு 286 மி.மீ.,மழை மட்டுமே பெய்துள்ளது. அதிலும், டிச., மாதம் முழுவதும் மழையில்லை. இரண்டு பருவ மழைகளும் ஏமாற்றிய நிலையில், குளிர்காலமான ஜன.,- பிப்., ல் 13 மி.மீ., சராசரி மழையளவாக உள்ளது. ஜன.,ல், 2006ல், 25 மி.மீ., ; 2007ல் 7.6 மி.மீ.,; 2008ல் 17.62 மி.மீ.,மழை பெய்துள்ளது. கடந்தாண்டு பெய்யவில்லை. பிப்., மாதத்தில் , 2008ல் மட்டும் 180 மி.மீ.,மழைபெய்துள்ளது.
கோடை காலமான மார்ச் முதல் மே வரை, 9 நாள் மழை ; 113 மி.மீ., சராசரி மழையளவாகும். இந்த சராசரி மழையளவில், ஜன.,ல் 3 மி.மீ.,; பிப்., 9 மி.மீ.,; மார்ச்சில் 58 மி.மீ., ; ஏப்., 10 மி.மீ.,; மே மாதம் 44 மி.மீ., மழையும் சராசரி மழையளவாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பாதியாக குறைந்தது. சராசரி மழையளவில் 77 மி.மீ., மழை பெய்யவில்லை. உடுமலை பகுதிக்கு தென்மேற்கு பருவ மழை ஏமாற்றினாலும், வட
கிழக்கு பருவ மழை பெரும்பாலும் ஏமாற்றியதில்லை. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையும் ஏமாற்றியது. சராசரி மழையளவில், 179 மி.மீ., மழை பெய்யவில்லை. குளிர்காலமான ஜன.,; பிப்., மாதங்களிலும் சுத்தமாக மழை இல்லாததோடு, கடும் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்பட்டதால், வறட்சி ஏற்பட்டது. கோடை மழை பெய்ய வேண்டிய மார்ச் மாதமும் வறண்ட நிலையே உள்ளது.
கோடை துவங்குவதற்கு முன்பே கடும் வறட்சி நிலை நீடித்து வருவதோடு, சராசரி மழையளவான 58 மி.மீ., மழையும் பெய்யாவிட்டால் , பல ஆண்டுகளாக இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிப்பதோடு; தென்னை போன்ற நிலைப்பயிர்களுக்கு கருகும் அபாயமும், குடிநீர் தட்டுப்பாடும் அபாயமும் உள்ளது

குறிச்சொற்கள்: உடுமலை பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் கடும் வறட்சி விவசாயம் பாதிக்கும், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது