இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சீஸன் துவங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி: மஞ்சள் ஏற்றுமதி பிரகாசமாக இருக்க வாய்ப்பு



ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் "ஏப்ரல்' மாதத்தில் சீஸன் துவங்குவதால் ஏற்றுமதி விற்பனை "பிரகாசமாக' இருக்கும் என ஈரோடு வியாபாரிகள் கூறுகின்றனர்.மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 185.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 701.66 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 158.64 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக திகழ்கிறது.



ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை மையம் கண்காணிப்பில், ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி மற்றும் தனியார் கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, நூற்றுக்கணக்கான தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதியில் இருந்து 40 சதவீத மஞ்சளும் வரத்தாகிறது. மாவட்டத்தில் மைசூரு சம்பா, எட்டாம் நம்பர், பத்தாம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை துவங்கி, ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டுக்கு வரத்தாகும்.



கர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து வழக்கமாக ஃபிப்ரவரி 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரத்தாகும். அதற்கு பின் புதிய மஞ்சள் சீஸன் வெகுவாக துவங்க ஆரம்பிக்கும். மைசூரு சம்பா, பத்தாம் நம்பர் ரகங்கள் ஃபிப்ரவரி, மார்ச் மாதத்தில்தான் வரத்தாகும்.


மஞ்சள் விலை இரண்டு ஆண்டுக்கு முன் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வரை விலைபோனது. மஞ்சள் வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை மஞ்சள் மூட்டைகளை தேக்கி வைத்தனர். ஆனால், 2009-10ல் மஞ்சள் எதிர்பாராத விதமாக குவிண்டாலுக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இந்த விலையேற்றம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை புருவம்தூக்க செய்தது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment