இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகளுக்கு ரூ.77 கோடி கடன்: கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தகவல்

"கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட 180 சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, மொத்தம் 77 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என, திருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளும், விவசாயிகளும் குறைகளை தெரிவித்தனர். கூட்டம் துவங்கியதும், விவசாய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.


கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 180 சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, 77 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 26.60 கோடி ரூபாய் அடமான கடனாகவும், 23.50 கோடி ரூபாய் நபர் கடனாகவும், 27 கோடி ரூபாய் நகை கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் 2006-07ல் 13 லட்சம் ரூபாய்; 2007-08ல் 23 லட்சம் ரூபாய்; 2008-09ல் 18 லட்சம் ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பயிர் கடன் இன்னும் வழங்கப்படவில்லை, என்று தெரிவித்தனர்."வசதி படைத்தவர்களும், நகை வைத்திருப்பவர்களும் மட்டுமே விவசாயிகள் பெயரில் பயிர் கடன் பெறும் நிலை உள்ளது. அதிகாரிகளால், கடன் வரம்பும் குறைவாக மதிப்பிடப்படுகிறது' என்று பயிர் கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை விவசாயிகள் கூறினர்.இதற்கு பதிலளித்த கலெக்டர் சமயமூர்த்தி, ""விவசாய கூட்டுறவு வங்கிகள் முன், பயிர் கடன் வழங்கும் நெறிமுறைகளை எழுதி வைக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடன் பற்றிய விபரங்களை, பத்திரிகைகளில் செய்திகள் வாயிலாகவும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டுக்கு கூடுதலான பயிர் கடன் வழங்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment