இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சேலம் உழவர் சந்தையில் வாடிக்கையாளர் ஆச்சர்யம் : மெகா சைஸ் பூசணிக்காய்சேலம் தாதகாப்பட்டி உழவர்சந்தையில் விற்பனைக்காக விவசாயி கொண்டு வந்த மெகா சைஸ் பூசணிக்காயை கண்டு, வாடிக்கையாளர் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.


சேலம் பனமரத்துப்பட்டி அடிக்கரையை சேர்ந்தவர் தங்கவேல் (27). உடல் ஊனமுற்றவரான இவர், தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை சேலம் தாதகாப்பட்டி உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று தனது தோட்டத்தில் விளைந்த பூசணிக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தார். பொதுவாக பூசணிகள், இரண்டு கிலோ முதல் அதிகபட்சமாக ஆறு கிலோ எடை கொண்டு இருக்கும்.ஆனால் தங்கவேல் கொண்டு வந்த பூசணி 26 கிலோ எடையுடன் மெகா சைஸாக இருந்தது. இந்த காய், அதிகாரிகள் மட்டுமின்றி, வழக்கமாக காய்கறிகளை வாங்க வந்த வாடிக்கையாளர் மத்தியில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இது குறித்து விவசாயி தங்கவேல் கூறியதாவது:எனது தோட்டத்தில் பூசணி செடிகளை பயிரிட்டு இருந்தேன். பூசணி செடியில் குறைந்த பட்சம் 20 முதல் 50 காய்கள் வரை காய்ப்பது வழக்கம். ஆனால் ஒரே ஒரு செடியில் மட்டும் மூன்று காய்கள் மட்டுமே காய்த்து இருந்தது. இந்த மூன்று காய்களும் 26 கிலோ முதல் 28 கிலோ எடை கொண்டதாக மெகா சைஸ் பூசணிக்காயாக உள்ளது. இதில் ஒரு காயை மட்டும் நேற்று அமாவாசை தினம் என்பதால் உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் உழவர்சந்தைக்கு விற்பனைக்கு வந்த மெகா சைஸ் பூசணிக்காய் என்ற பெருமை இருந்த காய்க்கு கிடைத்துள்ளது. இந்த காய் போக இன்னும் இரண்டு காய்கள் விற்பனைக்கு உள்ளது. அவற்றையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளேன். தற்போது உள்ள இந்த காயை அதிகாரிகளின் பார்வைக்கு உழவர்சந்தை அலுவலகத்தில் வைத்துள்ளேன். அவர்களின் அனுமதியுடன் விரைவில் காயை அறுத்து விற்பனை செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment