மஞ்சள் சாமந்தி பயிரிடுவதில் பண்ருட்டி விவசாயிகள் ஆர்வம்
7:24 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் சாமந்தி பயிரிடுவதில் பண்ருட்டி விவசாயிகள் ஆர்வம் 0 கருத்துரைகள் Admin
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் மஞ்சள் சாமந்தி பூக்களை விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர்.
பண்ருட்டி, அண்ணாகிராம பகுதி விவசாயிகள் முந்திரி, பலா, கொய்யா, மா, எலுமிச்சை, வாழை, சப்போட்டா போன்ற தோட்டப் பயிர்களையும், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், மிளகாய், வெண்டை, கத்திரி, மிள காய், புடலை, கொத்தவரை, பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிக அள வில் பயிரிட்டு வருகின்றனர். சில ஆண்டாக குண்டுமல்லி, மல்லி, கனகாம்பரம், ரோஜா போன்ற பூக் கள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது சின்னப் பேட்டை, கீழ்அருங்குணம், நல்லூர்பாளையம், கொங்கராயனூர் உள் ளிட்ட கிராமங்களில் 15 ஏக்கர் பரப்பளவில் மஞ் சள் சாமந்தி பூ பயிரிட் டுள் ளனர். தற்போது சாமந்தி பூ சீசன் துவங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கும் மஞ்சள் சாமந்தி பண்ருட்டி மார்க் கெட்டில் கிலோ 20 ரூபாயிற்கு மொத்த வியாபாரிகளிடம் விற்கின்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் சாமந்தி பயிரிடுவதில் பண்ருட்டி விவசாயிகள் ஆர்வம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது