இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பட்டுக்கூடு உற்பத்தியாளர் சந்தையில் கவனம் செலுத்தினால் நல்ல லாபம் விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'



உடுமலை: "பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்துவதில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தினால், கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும்', என வயல்வெளி பள்ளி துவக்க விழாவில் விஞ்ஞானி புனிதவதி பேசினார். உடுமலை கண்ணமநாயக்கனூரில் "ஆத்மா' திட்டத்தில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் வயல்வெளி பள்ளி துவக்க விழா நடந்தது. துறை உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.



விரிவாக்க மைய விஞ்ஞானி புனிதவதி பேசியதாவது: மல்பெரி பயிரிடும் போது மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 வரை இருப்பது பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாகும். தக்கைப்பூண்டு, சணப்பை பயிர்களை பயிரிடலாம். தொழிலாளர் பற்றாக்குறை காரணங்களால் தொழு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. புழு வளர்ப்பின் போது வீணாகும் கழிவுகளை பயன்படுத்தி எளிதாக தொழு உரம் தயாரிக்கலாம். இதனால், உற்பத்தி செலவு குறைவதுடன், தேவையான சத்துகள் மல்பெரி செடிக்கு கிடைக்கும். தரமான பட்டுக்கூடு என்பது ஒரு பட்டுக்கூட்டின் எடை இரண்டு கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும். கொள்முதல் மையங்களில் தரமான கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கிறது.



கூடுகளை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தினால், அனைத்து மையங்களிலும் நல்ல விலை கிடைக்கும். உடுமலை பகுதியிலிருந்து கர்நாடகா சந்தைக்கு கூடுகளை கொண்டு செல்லும் உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுகளால் விலை குறைகிறது. கூடுகளை ஒருங்கிணைந்து செல்வதற்காக அறுவடை நாட்களுக்கு முன்னதாகவே கூடுகளை பிரித்தெடுக்கின்றனர். அதிக கூடுகளை அழுத்தி எடுத்து செல்வதால் அவற்றின் தரம் வெகுவாக குறைகிறது. இதனால், ரீலர்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் கூடுகளுக்கு குறைந்த விலை நிர்ணயிக்கின்றனர். கொள்முதல் சந்தை பிரச்னைக்காக பட்டு வளர்ச்சி துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



"ஆட்டோமெட்டிக் ரீலிங் யுனிட்', உட்பட தொழிற்சாலைகள் விரைவில் அதிகளவு இயங்க வாய்ப்புள்ளதால் உள்ளூர் கொள்முதல் மையங்களிலேயே நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூடுகளை அறுவடை செய்யும் உற்பத்தியாளர்கள் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை முறையாக பின்பற்ற வேண்டும்', இவ்வாறு பேசினார். பட்டு விவசாயி ராமகிருஷ்ணன், இளநிலை ஆய்வாளர் அழகுராமலிங்கம் உட்பட பலர் பேசினர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment