இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்



: "திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இந்தாண்டு சின்ன வெங்காயம் அபரிமிதமாக விளைந்துள்ளது; இருப்பு வைத்து பயன்படுத்தவும், வெளிமாநிலங்களில் விற்பனை செய்யவும் அரசு தரப்பில் வசதி செய்ய வேண்டும்' என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார்.


விவசாயிகள் தெரிவித்த குறைகள்:குடிமங்கலம் பகுதியில் விவசாய இடுபொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாண எரிவாயு கலன் அமைக், அரசு தரப்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை. பாசன கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் வினியோகத்தில், நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக தடை செய்யப்படுவதால், விவசாய பணிகள் பாதிப்பதோடு, மின் மோட்டார்களும் பழுதடைகின்றன. விவசாயத்துக்கான மின் வினியோகத்தை சீரமைக்கவும், மும்முனை மின்சாரம் வழங்கவும் உயர்மட்ட அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.பொங்கலூர் பகுதியில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பரை கொள்முதலை பொருத்தவரை விவசாயிகள் பெயரில் வியாபாரிகளே பயனடைகின்றனர். எனவே, நேரடியாக தேங்காய் கொள்முதலை அரசு துவக்க வேண்டும். நொய்யலில் சாயக்கழிவு கலந்ததால், விவசாயம் பெருமளவு பாதித்துள்ளது; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு இன்னும் கிடைக்கவில்லை.


பொங்கலூர், கொடுவாய், முத்தூர் போன்ற கிராமங்களில் இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விளைச்சல் அபரிமிதமாக உள்ளது. ஆனால், அவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால், ஒரு கிலோ வெங்காயம் ஆறு ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.தேவைக்கு போக, அதிகப்படியான வெங்காயத்தை இருப்பு வைக்க குடோன் வசதி, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். முத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளது. இங்குள்ளவர்கள், பல்லடம் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, முத்தூரிலேயே கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன், குள்ளம்பாளையத்தில் மர்ம நோய் தாக்கி 70க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கோடை காலத்தில், கால்நடைகள் அதிகமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. எனவே, இந்த சீசனில் தடுப்பூசி போடுவதற்கு கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.


உடுமலையில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் தற்போது, நெல் அறுவடை தீவிரமாகியுள்ளது. இங்கு, அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தாராபுரம் பகுதியில் தனியார் வியாபாரிகள், ஒரு கிலோ நெல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கிலோவுக்கு 11 ரூபாய் வழங்கப்படுகிறது; எடைக்கூலி கிலோவுக்கு 60 பைசா வசூலிக்கப்படுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்தும் பயனில்லை; எடை கூலியை குறைக்க வேண்டும், என்பன போன்ற குறைகளை முன் வைத்தனர்.


விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு, கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது:விவசாய இடுபொருட்கள் விற்பனையை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாண எரிவாயு கலன் அமைக்க, அரசு வழங்கும் மானியம் பயனாளிகளுக்கு முறைப்படி வழங்கப்படுகிறது.


பாசன கால்வாய்களில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு, நெல்லுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு போன்ற நீண்ட காலப்பயிர்களுக்கு தண்ணீர் தேவை இருப்பின், பாசனத்திற்கான வாய்ப்பை ஆராய்ந்து வழங்கப்படும்.பொங்கலூரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் குடோன் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், திருப்பூர் மாவட்ட கிராமங்களில், சின்ன வெங்காயம் உற்பத்தியை அதிகாரிகள் கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.


70க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான கிராமத்தில், கால்நடைத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்திருந்தால், இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சிறப்பு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக்கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சமயமூர்த்தி தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment