கிசான் அட்டை பெற்ற விவசாயிகள் வேதனை : வங்கிகள் கடன் தருவதில்லை என புகார்
9:24 AM கிசான் அட்டை பெற்ற விவசாயிகள் வேதனை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விருதுநகர் மாவட்டம் - "கிசான் கடன் அட்டைகள் பெற்றாலும், வங்கிகள் கடன் தருவதில்லை' என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கிசான் கடன் அட்டைகள்: வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை பெறுவதற்கு, விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த கடன் அட்டை பெறுவதற்கு, வங்கி நிர்வாகம் வழங்கும் விண்ணப்பம், 10:1 அடங்கல் பயிர் சாகுபடி குறித்து விபரங்கள் வேண்டும். விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள மூன்று வங்கிகளில் கடன் வாங்கவில்லை என சான்று வழங்க வேண்டும். இந்த தகவல்களை பெற்ற வங்கிகள், விவசாயிகளுக்கு கிசான் கார்டுகளை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.கிசான் கார்டுகள் வழங்கப்படுவதில்லை:
கிசான் கார்டுகளை பெரும் பான்மையான வங்கி நிர்வாகங்கள், விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. அப்படியே கிசான் கார்டுகள் பெற்றிருந்தாலும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள், கடன் பெறும் விவசாயிக்கு, கடனை திரும்பி செலுத்தும் திறன் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். திருப்பி செலுத்தும் வசதி இருந்தாலும், வங்கி களப்பணியாளர்கள் அனுமதி அளித்தால் தான், வங்கி கடன் கிடைக்கும்.ராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்க தலைவர்) கூறியதாவது: கிசான் கார்டுகள் வழங்கியிருந்தாலும், வங்கி அலுவலர்கள் நினைத்தால் தான் விவசாயிகள் கடன் பெற முடியும். வங்கிகள் தங்களுக்கு வேண்டிய விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்குகின்றன. கிசான் கார்டுகள் மூலம் கடன் என்பது கண் துடைப்பாகவே உள்ளது, என்றார்.
குறிச்சொற்கள்: கிசான் அட்டை பெற்ற விவசாயிகள் வேதனை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது