1,450 டன் யூரியா தஞ்சைக்கு வருகை
9:29 AM 1, 450 டன் யூரியா தஞ்சைக்கு வருகை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
காவிரி டெல்டா மாவட்ட பயன்பாட்டுக்காக ஆயிரத்து 450 டன் யூரியா நேற்று ரயில் மூலம் தஞ்சாவூர் வந்தது. ஓமன் நாட்டில் உள்ள கிரிஸ்கோ நிறுவனத்துடன் 2009 - 10ம் ஆண்டில் எட்டு லட்சம் டன் யூரியா இந்தியாவுக்கு வழங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஓமனில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு யூரியா வந்தது. அங்கிருந்து ரயில் மூலம் 23 வேகன்களில் தஞ்சாவூருக்கு ஆயிரத்து 450 டன் யூரியா நேற்று வந்தது. தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கிரிஸ்கோ குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இவை எடுத்துச் செல்லப்படும். ஏப்ரல் மாதத்துக்குள் மேலும் இரண்டாயிரத்து 500 டன் யூரியா வர உள்ளது, என கிரிஸ்கோ உதவி மேலாளர் அருணாசலம் தெரிவித்தார்.
குறிச்சொற்கள்: 1, 450 டன் யூரியா தஞ்சைக்கு வருகை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது