கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு விவசாயிகளிடம் ஆர்வமில்லை
9:30 AM கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு விவசாயிகளிடம் ஆர்வமில்லை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
வறட்சி அதிகரித்தாலும் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.திண்டுக்கல் மாவட்டத் தில் 93 ஆயிரம் கிணறுகள் உள்ளன. இவற்றில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை ஏற்படுத்த ஒவ்வொரு விவசாயிக்கும் அரசு நபார்டு திட்டத்தில் 4 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதுவரை 19 ஆயிரம் விவசாயிகளுக்கு இத் திட்டத்தில் பணம் வழங்கப் பட்டுள் ளது. ஆனால் இதுவரை 400க்கும் குறைவான விவசாயிகளே தங்கள் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத் துள்ளனர். மற்ற விவசாயிகள் அரசு நிதி பெற்று பல மாதங்கள் ஆகியும் மழைநீர் சேகரிப்பு அமைக்க ஆர்வம் காட்டவில்லை.பொதுப்பணித்துறை நிலநீர் பிரிவு அதிகாரிகள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, நிலத்தடி நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
குறிச்சொற்கள்: கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு விவசாயிகளிடம் ஆர்வமில்லை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது