இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கப்பை கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டும் தேவாரம் விவசாயிகள்


தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக கப்பை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாக தேவாரம் உள்ளது. இறவை பாசன முறையில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கிறது. காய்கறி, தானிய பயிர்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இதற்கு விவசாய கூலியாட்கள் அதிகளவில் தேவைப் படுகின்றனர். பாத்தி கட்டுவது, விதைப்பு, களையெடுப்பு, அறுவடை சீசனில் கூலியாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கப்பை கிழங்கு சாகுபடியில் ஈடு படுகின்றனர்.விதை கரணை நடவு, களையெடுப்பு நேரத்தில் மட்டும் கூலியாட்கள் தேவை படுகின்றனர்.

பத்து மாத விவசாயம் என்பதாலும், கப்பைக்கு நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் கப்பை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், அரசு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கேரளாவில் அதிக சம்பளத்திற்கு ஆட்கள் வேலைக்கு செல்கின்றனர். கேரளா எஸ்டேட் வேலைக்கு செல்பவர்களுக்கே இருப்பிடத்திற்கே வந்து ஜீப்பில் அழைத்து செல்கின்றனர். வேலை முடிந்ததும் வீட்டில் கொண்டு வந்து விடுவதால் பெரும்பாலான விவசாய கூலிகள் அங்கு சென்று விடுகின்றனர். இதனால் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க கப்பை கிழங்கு சாகுபடி சிறந்ததாக உள்ளது என்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment