மூணாறில் வெப்பம் அதிகரிப்பு கோடை மழை பொய்த்ததால் தேயிலை விவசாயம் பாதிப்பு
8:09 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மூணாறில் வெப்பம் அதிகரிப்பு தேயிலை விவசாயம் பாதிப்பு 0 கருத்துரைகள் Admin
கேரளாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் வாட்டி வதைக்கிறது. பாலகாட்டில் நிலவிய வெப்பத்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டு 15 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெப்பம் நிலவி வருகிறது. மாநிலத்தில் கடந்த ஆண்டுகளை விட தற்போது பகலில் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் அதிகபட்சமாக பாலக்காட்டில் பகலில் வெப்பம் 41.5 டிகிரி செல்சியஸ்சாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் பாலக்காட்டில், தீக்காயங்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டு இதுவரையிலும் 15 பேர் பாதிக்கப் பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் முக்கிய நகரங்களில் பகலில் சில தினங்களாக நிலவி வரும் வெப்பம் (செல்சியஸ்சில்) திருவனந்தபுரம் 33, கொச்சி, ஆலப் புழா 34, கண்ணூர், கோழிக் கோடு 35, திருவல்லா 36, கோட்டயம், கொல்லம் 37, புனலூர், திருச் சூர் 39 டிகிரி செல்சியஸ்சாக காணப் பட் டது.
இரவில் அதிகபட்ச வெப்பமாக கோழிக்கோட்டில் 27 டிகிரி செல்சியஸ்சாக இருந்தது.மாநிலத்தில் மலை சூழ்ந்து மாவட்டமான இடுக்கி மாவட்டத் தில் கடந்த ஆண்டுகளை விட தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மாலையில் குளு குளு என காணப்படும் சுற்றுலா பகுதியான மூணாறில் வெப்பம் அதிகரித்துள்ளது. பகலில் வெப்பம் 32 டிகிரி செல்சியஸ்சை எட்டியது. இப்பகுதியில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் ல் கோடை மழை பெய் வது வழக்கம். இந்த மழை தேயிலை விவசாயத்துக்கு ஏற்றதாக அமையும். ஆனால் இந்தாண்டு இதுவரையிலும் கோடைமழை பெய்யவில்லை. ஆகவே மழையை வேண்டி தோட்ட தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களில் பொங்கல் வைத்து வருணபகவானை வணங்கி வருகின்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மூணாறில் வெப்பம் அதிகரிப்பு தேயிலை விவசாயம் பாதிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது