இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தீவன தட்டுப்பாடு அதிகரிப்பு: சந்தையில் குவிந்த கேரள வியாபாரிகள்



தீவன தட்டுப்பாட்டால் ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு ஜெர்சி, சிந்து, நாட்டுகிராஸ், சிந்து கிராஸ், சீமை, சுகந்தினி, செச்செப், ஃபிளாக் அண்ட் ஒயிட் ஆகிய மாடுகள், முரா, நாட்டு கிராஸ் ஆகிய ரக எருமை மாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மாடுகளை வாங்க சந்தைக்கு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் அடிப்பதால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் றைந்ததால் தீவனத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மாட்டு தீவனங்களான புல், சோளம், கேழ்வரகு, புண்ணாக்கு ஆகியவை விலையும் உயர்ந்துள்ளது. நிலமில்லாமல் வீட்டில் மாடு வளர்ப்போர் பலர் தீவனமில்லாததால் மாடுகளை விற்க துவங்கி உள்ளனர்.

ஈரோடு மாட்டு சந்தைக்கு சென்ற இரு வாரங்களாக மாடுகளின் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. சென்ற வாரத்தில் 400 மாடுகள் வரத்தான இடத்தில், நேற்று முன்தினம் மார்க்கெட்டில் 500க்கும மேற்பட்ட மாடுகள் வரத்தானது. இதேபோல் எருமை மாட்டின் வரத்தும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.

மாடு வியாபாரிகள் கூறியாதவது: விவசாய நிலம் வைத்துள்ளவர்கள் மட்டும் ஒரு சிலர் தங்கள் மாடுகளை பராமரித்து வருகின்றனர். நிலம் இல்லாமல் வீடுகளில் மாடு வளர்ப்வோர் தீவனம் வாங்க முடியாமல் மாடுகளை விற்க துவங்கி விட்டனர். கேரளாவில் மாடுகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதால் கேரளாவை சேர்ந்த பலர் மாட்டு சந்தையில் இருந்து அதிகளவில் மாடு வாங்கி செல்கின்றனர். மாடு வரத்து அதிகரிப்பு காரணமாக பசு மாடு ஒன்று 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடு 13 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. வெயில் தொடர்ந்து அடிப்பதால் தீவனத்தட்டு ஏற்பட்டுள்ளதால், வரும் வாரங்களில் மாடுகளின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment