மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் சோகம்
6:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை விவசாயிகள் சோகம் 0 கருத்துரைகள் Admin
மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் சோகம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் விவசாய கிணறுகள் வறண்டதால், பயிரிடப்பட்ட மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் கடந்த ஆண்டு மஞ்சள் விலை ஒரு குவிண்டல் 12 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி பகுதியில் பள்ளித்தெருப்பட்டி, பெரமனூர், நல்லியாம்புதூர், குரால்நத்தம், கோம்பைக்காடு, பெரமனூர், மல்லூர் உள்ளிட்ட பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிட்டனர். ஃபிப்ரவரி முதல் அறுவடை துவங்குவது வழக்கம். மஞ்சள் பயிருக்கு வாரம் ஒரு முறை தவறாமல் தண்ணீர் விடவேண்டும். நடப்பாண்டில் பருவ மழை பொய்த்ததால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மஞ்சள் அறுவடை செய்யப்படும் ஒரு மாதத்திற்கு முன் மேற்புறத்தில் இருக்கும் தண்டு பகுதி அறுத்து எடுத்துவிட்டு, மண்ணில் இருக்கும் கிழங்கு பகுதி வளர்ச்சி அடைய தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு மண்ணில் உள்ள கிழங்கு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பனமரத்துப்பட்டி பகுதியில் மஞ்சள் அறுவடை சீஸன் துவங்கி உள்ளது. கிணறு வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மண்ணில் உள்ள மஞ்சள் கிழங்கை வெட்டி எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: மஞ்சள் அறுவடை செய்ய தேவையான தண்ணீர் இல்லை. தண்ணீர் விலைக்கு வாங்கி மஞ்சள் பயிரிட்ட வயலில் விட்டு, அறுவடை செய்து வருகிறோம். 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டேங்க் தண்ணீர், தற்போது 400 ரூபாய் வரை அதிகரித்துவிட்டது. தண்ணீர் விலைக்கு கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் நன்கு விளைந்த மஞ்சள் அறுவடை செய்ய முடியாமல் வயலில் காய்ந்து கிடக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை விவசாயிகள் சோகம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது