இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

செண்டுமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதியில் செண்டுமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எந்நேரமும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பூ மார்க்கெட்டையும், வடவள்ளியில் உள்ள ஏ.வி.டி. தொழிற்சாலையையும் நம்பி டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் செண்டுமல்லி சாகுபடி செய்கின்றனர்.


செண்டுமல்லி மூன்று மாதப்பயிர். மார்கழியில் நடவு நட்டு, பங்குனியில் அறுவடை செய்வர். டி.என்.பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் செண்டு மல்லி சாகுபடி செய்துள்ளனர். வாசனை திரவியம் தயாரிக்க ஏ.வி.டி. தொழிற்சாலைக்கு இந்த பூக்கள் எடுத்து கொள்ளப்படுகின்றன. செண்டு மல்லிக்கு சாகுபடி செலவு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகிறது. பூச்சி மருந்துகளும் இடுபொருட்களும் விலையேற்றமாகியுள்ள இந்நேரத்தில் செண்டு மல்லியை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியுள்ளது. ஏனென்றால், செண்டுமல்லியின் விலை வெகுவாக குறைந்துள்ளது. சீஸனின் போது ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் மற்ற நாட்களில் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட செண்டு மல்லி, இன்றோ மூன்று ரூபாய்க்கு விவசாயிகள் விற்பனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக பூக்கள் உற்பத்தியானதால், செண்டு மல்லியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. போட்ட முதலை திரும்பப் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பவானியாறு குடிநீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கிரி கூறியதாவது: செண்டு மல்லிக்கு நல்லவரவேற்பு இருப்பதால் எல்லோரும் செண்டு மல்லியை சாகுபடி செய்தனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டு நல்ல விளைச்சல் கிடைத்தாலும் சந்தையில் ஏற்பட்ட விலை சரிவால், போட்ட அசலை எடுக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். அளவுக்கு அதிகமான உற்பத்தியின் விளைவுதான் இந்த வீழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment