இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காட்டுமல்லி− விவசாயிகள் தீவிரம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களில் காட்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராமங்களான செதில்பாக்கம்,ராக்கம்பாளையம், அமரம்பேடு, தாணிப்பூண்டி, நேமளூர், ஐயர் கண்டிகை, தோக்கமூர், வழுதலம்பேடு உட்பட பல கிராமங்களில் காட்டுமல்லி பயிரிடப்பட்டு வருகிறது.குறைந்த காலத்தில் அதிக வேலை பளு இல்லாத சூழலில், ஒரளவு லாபம் தரும் பயிராக காட்டுமல்லி இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மேற்கண்ட பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகள் கூட 2 சென்ட், 3 சென்ட் அளவு நிலத்தில் கூட காட்டுமல்லி பயிரிட்டு வருகின்றனர்.ஒரு குடும்பத்தில் உள்ள 4, 5 உறுப்பினர்கள்கூட காட்டுமல்லி பயிரிட்டு காட்டுமல்லி வளர்ந்ததும் அதைப் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்ல போதுமானதாக உள்ளதால் வெளிநபர்களை வேலைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழலே காட்டுமல்லி பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வமாக உள்ளதற்கு காரணமாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து காட்டுமல்லி பயிரிட்டு வரும் செதில்பாக்கம் பகுதி எம்.ஏ. பட்டதாரி இளைஞரான ரூபனை கேட்டபோது, ""செதில்பாக்கம் பகுதியானது மண் வளம் மிக்க பகுதியாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் காட்டுமல்லி பயிரிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். காட்டுமல்லி நாற்று நட்ட 6-வது மாதத்தில் காட்டுமல்லி பூக்கத் தொடங்குகிறது.5 ஆண்டுகளாவது இந்த செடியில் இருந்து பூக்களை விவசாயிகள் பறித்து சென்னை கோயம்பேடு பூ மொத்த விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்று விற்பார்கள்.இந்த தொழிலில் ஒரளவு கிடைக்கும் லாபம் இப்பகுதி மக்களை காட்டுமல்லி சாகுபடியில் அதிக ஆர்வம் கொள்ள செய்கிறது'' என்கிறார் ரூபன். இதே போன்று ராக்கம்பாளையம் பகுதியை விவசாயி பிரதாபனிடம் கேட்டபோது, ""ஆண்டில் பனிக்காலமாக 3 மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் காட்டுமல்லி அதிக அளவு மலர்கிறது. அவ்வப்போது இந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சினால் நன்கு வளரக் கூடியதாக காட்டுமல்லி உள்ளது'' எனக் கூறினார்.மேற்கண்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் அதிகாலையிலேயே பஸ்களில் பூக்கள் கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மல்லி இல்லாத காலங்களில் காட்டுமல்லி ஒரு சேர் (300 கிராம்) ரூ.60 வரை விற்று வந்ததாகவும் தற்போது மல்லி அதிக அளவு விற்பனைக்கு வந்து இருப்பதாலும் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவு காட்டுமல்லி வளர்ந்து விற்பனைக்கு சென்னைக்கு செல்வதால் தற்போது ஒரு சேர் (300 கிராம்) ரூ.20-க்கு விற்பதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment