இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

புதிய அரிசி வரத்து குறைவு: கம்பு, சோளத்துக்கு வரவேற்பு



ஈரோடு அக்ரஹாரம் அரிசி சந்தையில் வெயில் காரணமாக கம்பு, சோளம் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு கிலோ கம்பு 12 ரூபாய், சோளம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நெல் அறுவடை முடிந்ததால் அரிசி விலை இனி ஏறுமுகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு அக்ரஹாரம் அரிசி சந்தைக்கு, சில வாரங்களுக்கு முன் புது அரிசி வரத்தானபோது விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை குறைந்தது. நெல் அறுவடை முடிந்ததால், அரிசி வரத்து சீராக உள்ளது. சென்ற இரு வாரங்களாக அரிசி சந்தைக்கு 5,000 மூட்டை வரை வரத்தாகிறது. அரிசி விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. இனி வரும் காலங்களில் வறட்சி காலமாக இருப்பதாலும், நெல் அறுவடை பணி நடக்காது என்பதாலும் அரிசி விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி அரிசி மார்க்கெட்டில் கர்நாடக டீலக்ஸ் பொன்னி பழையது 75 கிலோ மூட்டை 2,500 முதல் 2,650 ரூபாய், புதியது 2050 ரூபாய் முதல் 2,150 ரூபாய், பி.பி.டி., பழையது 2,200 ரூபாய், புதியது 1,750 ரூபாய், அதிசய பொன்னி பழையது 1,750 ரூபாய், புதியது 1,500 ரூபாய், கோ 36 ரகம் பழையது 1,650 ரூபாய், புதியது 1,500 ரூபாய், கோ 43 ரகம் 1,250 ரூபாய் முதல் 1,350 ரூபாய், ஐ.ஆர்.20 ரகம் 1,400 ரூபாய் முதல் 1,450 ரூபாய், இட்லி அரிசி 1,500 ரூபாய், கல்சர் இட்சி அரிசி 1,450 ரூபாயக்கு விற்கப்படுகிறது.


அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் மற்றும் மொத்த வியாபாரி கந்தசாமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் நெல் அறுவடை பணி முடிந்துள்ளது. அரவை செய்யப்படும் அரிசி மட்டுமே மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. நெல் அறுவடை முடிந்ததால் அரி மார்க்கெட்டுக்கு இனி அதிகளவில் அரிசி வரத்தாகாது. சென்ற சில வாரங்களுக்கு முன் அரிசி மார்க்கெட்டுக்கு புதிய அரிசி வரத்தானபோது அரிசி விலை குறைந்தது. வரும் காலங்களில் அரிசி வரத்து அதிகரிக்காது என்பதால் குறைய வாய்ப்பில்லை. அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அரிசி மார்க்கெட்டில் பின்புற பகுதியில் கம்பு, சோளம் விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சில நாட்களாக 97 டிகிரி வரை வெயில் கொளுத்துவதால், குளிர்ச்சி தரும் பொருள்கள் விற்பனை ஜோராக உள்ளது. கூழ் தயாரிக்க பயன்படும் கம்பு, சோளம் ஆகியவை விற்பனை நன்றாக உள்ளது. ஒரு கிலோ கம்பு 12 ரூபாய்க்கும், சோளம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இது தவிர தினை, கேழ்வரகு ஆகியவையும் இங்கு விற்பனையாகிறது.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment