பால் விலை உயர்த்த கோரும் விவசாயிகள்
9:38 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பால் விலை உயர்த்த கோரும் விவசாயிகள் 0 கருத்துரைகள் Admin
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வைக்கோல், சோளத்தட்டு மற்றும் இதர உலர் தீவனம் விலை உயர்ந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால், கூலியும் உயர்ந்துள்ளது. எனவே, ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ஐந்து ரூபாயும், எருமை பாலுக்கு ஐந்து ரூபாயும் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். இதுபற்றி, பால் கொள்முதல் விலையை நலச்சங்க உறுப்பினர்களை அழைத்து பேசி, வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஆவின் கால்நடைத் தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் வாங்கும் பாலுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஊக்க விலை கொடுக்க வேண்டும். இதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பால் விலை உயர்த்த கோரும் விவசாயிகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது