இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பால் உற்பத்தியாளர் போராட்ட அறிவிப்பு அனாவசியம்: அமைச்சர் மதிவாணன்

''தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தி வரும் நிலையில், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலை உயர்வு வேண்டி போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது அனாவசியமானது,'' என, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தெரிவித்தார். சேலம், ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் நேற்று திடீர் ஆய்வு பணி மேற்கொண்டார். வெண்ணெய் 'பேக்கிங்' செய்யும் பிரிவில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் பெண்களுக்கான கூலி நாளொன்றுக்கு 80 ரூபாய் என்பதை அமைச்சர் மதிவாணன் கேட்டறிந்தார். 'குறைவான கூலி கொடுத்து பெண்களை வேலைக்கு வைத்துள்ளதாகவும், அவர்களுக்கான சரியான கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்' என, அமைச்சர், அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பால் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.




பின்னர் அமைச்சர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 26 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்து, பதப்படுத்தி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 10 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தினமும் நான்கு லட்சத்து 46 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூர் தேவைக்காக ஒரு லட்சத்து 52 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. உபரியாக உள்ள 5 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் தான் ஆண்டுக்கு ஒரு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுகிறது. பசும்பால் லிட்டருக்கு 5.50 ரூபாய், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் என கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சென்னைக்கு தினமும் 2.30 லட்சம் லிட்டர் பால் அனுப்பிவைப்பதால், சேலம் ஆவினுக்கு நஷ்டம் எதுவும் இல்லை. உள்ளூர் தேவையை பூர்த்தி செய்து, மிகுதியாக உள்ள பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.




சந்தை விலையை காட்டிலும், சென்னை ஆவினுக்கு குறைந்த விலையில் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதால், எவ்வித நஷ்டமும் சேலம் ஆவினுக்கு கிடையாது. சென்னை, சேலம் ஆவின் பால்பண்ணை வெவ்வேறு துறை சார்ந்தது இல்லை என்பதால், அனைத்தும் ஒரே துறையின் கீழ் இயங்கி வருகிறது. மக்களிடம் பால் பொருட்கள் லாபத்துக்கு விற்பனை செய்வதால், இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டி போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது அனாவசியமானது. ஆறு மாதத்துக்கு முன் தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தி வருவது தி.மு.க., ஆட்சியில் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்து உயர் நீதிமன்ற உத்தரவும், அரசின் கொள்கை முடிவை பொறுத்தே உள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பால்வளத்துறை சம்பந்தமாக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.



தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்து வருபவர்கள் பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல் உள்ளது. இவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேரவில்லை. இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசையாக உள்ளது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவாணன் கூறினார். கலெக்டர் சந்திரகுமார், ஆவின் பொது மேலாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment