இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிளாஸ்டிக் கழிவால் பாழாகும் விளை நிலங்கள்: நிலத்தடி நீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கலக்கம்



தர்மபுரி மாவட்ட விளைநிலங்களில் அதிக அளவில் சமீப காலமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதால், விளைநிலங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. குறிப்பாக தேசிய நெடுங்சாலையோரங்களில் அதிக அளவில் நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழைக்கு ஏற்ப விவசாய பணிகள் சுழற்சி முறையில் நடந்து வருகிறது. நடப்பாண்டில் போதிய அளவில் பருவ மழை கைகொடுக்காத நிலையில் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளுக்கு கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்திலும் வறண்ட நிலையும், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயல்வெளிகள் மற்றும் வறண்ட நீர் ஆதாரங்களில் உள்ள புல்வெளிகளில் தற்போது, கால்நடைகள் மேய்ச்சல் நிலமாக மாறியிருப்பதால், தற்போதைக்கு கால்நடைக்கு தேவையான தீவன தட்டுப்பாடுகள் அதிக அளவில் இல்லாமல் உள்ளது.


இருப்பினும், வரும் காலங்களில் நீர் ஆதாரங்களில் வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டமும் கேள்விக்குறியாகியுள்ளதால், விவசாய பணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாசி பட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் நிலங்களில் எந்த பயிரும் சாகுபடி செய்யாத நிலையில், சாலையோரங்களில் உள்ள நிலங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து நிலங்கள் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக சாலையோரங்களில் குவியலாக கொட்டப்படும் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து விளை நிலங்கள் முழுவதும் பரவி விடுகிறது. இதனால், மழை பெய்யும் போது விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் தங்குவது அரிதாகி வருகிறது. மாவட்டத்தில் விவசாய நிலங்களில் பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் நாட்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஆகிய சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் கவர்கள் நிலங்களில் மண்ணில் கிடப்பதால், நிலத்தில் நிலத்தடி நீர் தங்குவது கேள்விக்குறியாகி வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து பழைய தர்மபுரியை சேர்ந்த விவசாயி கோவிந்தன் கூறும் போது,''பஸ் மற்றும் வேன்களில் வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி விட்டு, வெளியில் தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகளும் விளை நிலங்களில் மண்ணொடு கலந்து மாசு தன்மை ஏற்பட்டு வருகிறது. நிலம் மாசுப்படுவதை தடுக்க தனி நபர்கள் இது போன்ற கவர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்,'' என்றார்.


பிளாஸ்டிக் கழிவுகளால் நில, நீர் மாசு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் செய்த போது, விளை நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளால் எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால், பொதுமக்கள் பிளாஸ்டிக் கவர்களை நிலங்களில் வீசுவதை நிறுத்த வேண்டும்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment