இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உற்பத்தி அதிகரிப்பால் வாழைப்பழம் விலை சரிவு



சத்தியமங்கலம், தூத்துக்குடி, கோபி பகுதிகளில் வாழைக்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கோவையில் வாழைப்பழங்களின் விலை குறைந்தது.கோவை தடாகம் ரோட்டிலுள்ள மாநகராட்சி வாழைக்காய் மண்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழைத்தார் விற்பனைக்கு வந்தது. இதில் பூவன் வாழைத்தார்களே அதிகமாக இருந்தன. சத்தி, தூத்துக்குடி பகுதியிலிருந்து 20 லாரிகளில் வாழைத்தார்கள் வந்தன. அதேபோல், கோபிசெட்டிபாளையத்திலிருந்தும் ஏராளமான வாழைத்தார்கள் வந்தன.பூவன் 175 ரூபாயிலிருந்து 200 வரை விலை போனது.

வழக்கமாக இவை 400 வரை விலை போகும். எங்கு பார்த்தாலும் பூவன் தாராக இருந்ததால் அதிக விலைக்கு விற்கவில்லை.கரூர் மற்றும் திருச்சியிலிருந்து ரஸ்தாளி வாழைத்தார் வந்தது. வழக்கமாக, 500 ரூபாய்க்கு விற்பவை, நேற்று 200 ரூபாயிலிருந்து 250 வரை விற்றன. மோரீஸ் 250 ரூபாய் விற்றது. செவ்வாழை வழக்கமாக 600 ரூபாய்க்கு விற்பனையாவது, நேற்று 400 ரூபாய்க்கு விற்றது.வாழைக்காய் மண்டி தலைவர் கணேசன் கூறியதாவது: வெயில் காலத்தில் வாழைப்பழங்களை சுவைப்பவர்கள் குறைவு. தாகம் தணிப்பதற்கு மற்ற பழங்களை மக்கள் நாடுவதால் வாழைப்பழங்களை சுவைப்பதை தவிர்ப்பர். அதோடு, பங்குனி மாதமாக இருப்பதால் திருமண முகூர்த்தங்களே கிடையாது. சித்திரைக்கனிக்கு தான் பழங்கள் விலை உயரும். தற்போது உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளதால், விலை பல மடங்கு குறைந்துள்ளது, என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment