இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பசுமை குடிலுக்கு விவசாயிகள் 'விசிட்'



தொழில்நுட்ப பசுமை குடில் பற்றி தெரிந்து கொள்ள, திருப்பூர் விவசாயிகள் "கல்வி சுற்றுலா' சென்றனர்.
காரமடை பகுதியில் உயர் தொழில்நுட்ப பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் விவசாயி களும் பசுமை குடில் அமைக்க, நீர் வள நில வள திட்டத்தின் கீழ், தோட்டக்கலை துறை மூலம் 20 விவசாயிகள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். தோட்டக்கலை துறை அதிகாரி கூறியதாவது: உயர் தொழில்நுட்ப பசுமை குடிலை திருப்பூர் விவசாயிகள் அமைக்கவில்லை. கோவை, காரமடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில்களின் பயனை தெரிந்து கொள்ள, கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வெயில், மழை, காற்று, பூச்சி தாக்குதல் என, பல பாதிப்புகளில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறை பசுமை குடில்களில் உள்ளன. தண்ணீர் சேமிப்பு கிடைக்கிறது. இம்முறையில் அனைத்து பயிர்களும் பயிரிடலாம்; பூ வகைகள், தக்காளி போன்ற பயிர்களுக்கு அதிக பலன் தரும். ஒளிச்சேர்க்கை அதிகளவில் கிடைப்பதால், பசுமை குடில் முறையில் இரண்டு மடங்கு மகசூல் அதிகமாக எடுக்க முடியும். சுமார் 25 சென்ட் பரப்பளவு கொண்ட, ஒரு யூனிட் உயர் தொழில்நுட்ப பசுமை குடில் அமைக்க ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதில், 50 சத வீதம் அரசு மானியம் அளிக்கிறது. ஒரு குடிலில் ஆறு ஆண்டுகள் வரை விவசாயம் செய்யலாம், என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment