தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேளாண் பண்ணைப் பணியாளர்கள் கோரிக்கை
5:21 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் வேளாண் பண்ணைப் பணியாளர்கள் கோரிக்கை 0 கருத்துரைகள் Admin
தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விவசாயத்துறை பண்ணைப் பணியாளர் சங்க மாநிலப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர், சத்துவாச்சாரியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கத்தின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு அரசு விவசாயத்துறை பண்ணைப் பணியாளர் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில கெüரவத் தலைவர் சி.ராஜவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், பொருளாளர் ஜோதிராமலிங்கம், சட்ட ஆலோசகர் இ.கன்னையன், தமிழ்நாடு விவசாயத் துறை பண்ணைப் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.மனோகரன், பொருளாளர் சங்கர் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தோட்டக்கலை துறை பண்ணைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சின்னராஜ், பேரூராட்சி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ்,மாநிலத் தலைவர் ஏ.சோலை, துணைத்தலைவர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 84 விவசாயத் துறை பண்ணைகளில் உள்ள 10 ஆண்டுகள் பணி முடித்த 2500 பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடிக்காத தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.220 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் வேளாண் பண்ணைப் பணியாளர்கள் கோரிக்கை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது