இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளைச்சலை அதிகரிக்கதுல்லிய பண்ணை திட்டம்


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குரல்குட்டையில் கோவை வேளாண் பல்கலை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தில் துல்லிய பண்ணை திட்ட கருத்தரங்கு நடந்தது; ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.வேளாண் பல்கலை நீர்நுட்ப மைய பேராசிரியர் மாணிக்கசுந்தரம் பேசியதாவது:விளைநிலத்தில் தண்ணீர் தேவையை குறைத்து, விளைச்சலை அதிகரிக்க துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



நீர்வள நிலவள திட்டத்தில் பல்கலை சார்பில் கடந்தாண்டு உடுமலை பகுதியில் 25 எக்டேரில் காய்கறி பயிர்களும், 40 எக்டேரில் தென்னை சாகுபடி, நான்கு எக்டேரில் வாழைக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.மானியத்தில் 60 சதவீதம் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், பிற இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. துல்லிய பண்ணை திட்டத்தை பயன்படுத்தும் விவசாயிகள் நல்ல லாபம் பெறுகின்றனர், என்றார்.இணை பேராசிரியர் ரவிக்குமார், காய்கறி பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன முறையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேசினார். துணை பேராசிரியர் செல்வக்குமார், முதுநிலை ஆராய்ச்சியாளர் கலாமணி உட்பட பலர் பேசினர். துல்லிய பண்ணை திட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ள நிலத்தில் விவசாயிகளுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment