இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வறட்சியால் நெல் விவசாயிகள் தவிப்பு வாடகை தண்ணீருக்கும் போட்டி


கண்மாய்களில் நீரின்றி வறட்சி நிலவுவதால் பயிர்களை காக்க முடியாமல் நெல் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கிணறுகளின் நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் வாடகை தண்ணீருக்கும் விவசாயிகளிடையே கடும் போட்டியாக உள்ளது.விருதுநகர் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான வத்திராயிருப்பில் கடந்த மழை சீசனின் போது போதிய மழை பெய்யவில்லை. மற்ற பகுதிகளில் பெய்த மழையை விட மிக மிக குறைந்த அளவே பெய்தது. இதனால் கோடைகாலம் முழுவதும் தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய கண்மாய், கால்வாய்கள், கிணறுகள் இம்முறை கோடை துவங்குவதற்கு முன்பாகவே வற்றத்துவங்கிவிட்டன. அதிலும் கடந்த 20 நாட்களாக, வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக உள்ளது. நிலங்களில் ஈரத்தன்மை வெகு வேகமாக குறைந்து ஆங்காங்கே பாளம்பாளமாக வெடிக்கத் துவங்கியுள்ளது.பழுக்கும் நெற்பயிர்கள்: பயிரிடாத நிலங்களின் நிலைமை இப்படியிருக்க, பயிரிட்டுள்ள நிலங்களிலோ நெற்பயிர்களுக்காக தேக்கப்பட் டுள்ள நீர் வெகு வேகமாக வற்றியும் விடுகின்றன.

இதனால் ஏற்கனவே நீர்பாய்ச்சிய நிலங்களுக்கு கூட உஷ்ணத்தை தணிக்க, தினமும் திரும்பத்திரும்ப நீர்பாய்ச்ச வேண்டியுள்ளது. ஒருநாள் பாய்ச்சாமல் விட்டாலும் வெயிலால் உஷ்ணமடைந்த நீரில் நெற்பயிர்கள் அனைத்தும் பழுக்க துவங்கிவிடுகிறது.நீர் பற்றாக்குறை: வழக்கமாக கோடையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் தாங்கள் தேவைக்கு போக, மீத நேரங்களில் அக்கம்பக்கத்து நிலங்களுக்கு வாடகைக்கு நீர் பாய்ச்சுவர். இதற்காக மணிக்கு 25 முதல் 50 ரூபாய் வரை வசூலிப்பர். ஆனால், இம்முறை கிணற்றுப்பாசன விவசாயிகளுக்கே நீர்தேவை அதிகமாக உள்ளது.

அதுவும் தவிர, கிணறுகளின் நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் இருக்கும் நீர் அவர்களுக்கே போதவில்லை. ஒருசில கிணறுகளில் நீரோட்டம் இருந்தாலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, விவசாயத்திற்கான மின்வினியோக நேரம் குறைப்பு போன்றவற்றால் தேவையான நீரை பெற முடியவில்லை.நீருக்கு போட்டி: இந்நிலையில் கிணற்றுப்பாசன விவசாயிகளை நம்பி, வாடகைக்கு நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நடவு செய்த அருகில் உள்ள நெல் விவசாயிகள், வாடகைக்கும் நீர் கிடைக்காததால் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பலர் நாற்றுப்பாவியதோடு மேற்கொண்டு நீர் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர். இத்தனை கஷ்டத்தையும் தாங்கியும், தாண்டியும் ஒருசில விவசாயிகள் வாடகைக்கு நீர் பாய்ச்சுகின்றனர். அவர்களிடம் மற்ற விவசாயிகள் போட்டிபோட்டு முற்றுகையிட்டு தாங்கள் நிலத்திற்கு நீர்பாய்ச்சுமாறு கெஞ்சிவருகின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment