இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயத்துறையில் உதவி இயக்குனர் பணியிடங்கள் ரத்து செய்து உத்தரவு


தேனி மாவட்டம் உழவர் பயிற்சி மையங்களில் விவசாயத்துறை உதவி இயக்குனர் பணியிடங்களை ரத்து செய்து அதற்கு பதிலாக துணை இயக்குனர் பணியிடங்களை அரசு புதிதாக உருவாக்கி உள்ளது. இது வரை உதவி இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த உழவர் பயிற்சி மையங்கள் இனி துணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளன. விவசாயத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 22 உழவர் பயிற்சி மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் உதவி இயக்குனர்களின் கட்டுபப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. வட்டார வாரியாக 379 விவசாயத்துறை உதவி இயக்குனர்கள் மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இவர்கள், வட்டார அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், செயல்விளக்கம் அளித்தல், விவசாயிகள் சுற்றுலா, உழவர் ஊர்வலம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றனர். உதவி இயக்குனர்களை கொண்டு இந்த பணிகளை செய்வதில் பல இடர்பாடுகள் அரசால் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை நீக்கி திறம்பட செயல்படவும், உழவர் பயிற்சி மையங்களை வலுவடையச்செய்யவும், திறமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 22 உழவர் பயிற்சி மையங்களில் உள்ள உதவி இயக்குனர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் துணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவில் நடக்கும் விவசாயிகளுக்கான அனைத்து பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள், சுற்றுலா உட்பட அனைத்தும் இனி துணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் நடக்கும். ஆத்மா திட்டத்தின் இணைப்பு அலுவலராகவும் இவர் செயல்படுவார். மத்திய அரசு திட்டங்களான ஐசோபர்ம், தேசிய விவசாய வளர்ச்சி திட்டங்களின் கீழ் நடக்கும் அனைத்து பணிகளும் இனி துணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போதுள்ள 22 உதவி இயக்குனர்களும் மாற்று பணியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment