இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சாலையே உலர் களம்: விவசாயிகளின் அவலம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் தானியங்களை உலர்த்த இடமில்லாததால் விவசாயிகள் நெடுஞ் சாலையை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.திருக்கோவிலூர் சுற்றுப் பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, உளுந்து பயிர் செய்து வருகின்றனர். பல விவசாய நிலங்கள் பாசன வசதிகளின்றி உள்ளதால் மானாவாரி பயிர் செய்கின்றனர். பருவ மழை காலத்தில் உழவுகள் செய்து மணிலா, உளுந்து, கொள்ளு, சூரியகாந்தி பயிர் செய்கின்றனர். சொற்ப அளவில் கிடைக் கும் நீரினை பாய்ச்சி பயிர் செய்தும், அறுவடை நேரத் தில் தானியங்களை உலர்த்த போதிய உலர் கள மின்றி அவதியடைகின்றனர்.தற்போது உளுந்து, கொள்ளு, பச்சைப்பயிர் போன்ற தானியங்கள் அறுவடை செய்யும் விவசாயிகள் அதனை உலர்த்தி எடுக்க போதிய உலர் கள வசதியில்லாததால் நெடுஞ் சாலைகளையே களமாக்கி உலர்த்தி வருகின்றனர்.இதனால் விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் காணை துவங்கி ஆயந் தூர், முகையூர், அரகண்டநல்லூர் வரை ஆங் காங்கே சாலையில் தானிய கொடிகளைப் போட்டு உலர்த்தி வருகின்றனர்.இவர்கள் சாலையில் நின்று வாகனங்கள் பயிர்களின் மேல் ஏறிச் சென்றவுடன் தானியங்களை பிரித் தெடுக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிக்கின்றனர். இந்த விவசாயிகளுக்கு போதிய உலர் களங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment