இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வாழை, கரும்பு பயிர்கள் வாடல்காரமடை விவசாயிகள் கவலை


கோவை மாவட்டம் காரமடையில், அறுவடை நிலையிலுள்ள வாழை, கரும்பு பயிர்கள், தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கறிவேப்பிலை, வாழை, கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. தவிர, காய்கறி, மலர்கள், தானியம், கால்நடை தீவன பயிர்களும் பயிரிடப்படுகின்றன. மேட்டுப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றை ஒட்டியுள்ள தேக்கம் பட்டி, சிறுமுகை, பாலப்பட்டி பகுதிகளில் ஆற்று நீரை மோட்டார் மூலமாக எடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில், நிலத்தடிநீரை மட்டுமே நம்பி விவசாயம் நடக்கிறது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக கோவை மாவட் டத்தில் மழைபொழிவின் அளவு வெகுவாக குறைந்ததால், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் தாழ்வாக சென்றுவிட்டது. கிணறுகளில் நீர் ஊற்றுகள் குறைந்துவிட்டன. சில கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன.


இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் வாழை, கரும்பு பயிர்களுக்கு அதிக முதலீடும், நீரும் தேவைப்படுகிறது. வரும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு பயிர் அறுவடை செய்ய கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் நடப்பட்டு தற்போது அறுவடை நிலையில் உள்ள வாழைகள்,
நீர் பற்றாக்குறையால் காய்ந்து வருகின்றன. காரமடை அருகே உள்ள தாயனூர் பகுதி விவசாயிகள் கூறிய தாவது:
"சித்திரை விஷு' பண்டிகை காலத்தில், வாழை பழத்துக்கு நல்ல விலை கிடைக்கும். அதை கருத்தில் கொண்டு கதளி, பூவன், தேன் வாழை, பச்சை வாழை உட்பட பலவகை வாழைகளை சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை குறைவாக பெய்ததால், கிணறுகளில் ஊற்று குறைந்து விட்டது. நீலத்தடி நீர் மட்டமும் கீழ் நோக்கி சென்றதால், போர்வெல் கிணறுகளிலும் நீர் குறைந்து விட்டது. அறுவடைக்கு தயாராகியுள்ள வாழை மரங்களுக்கு பாய்ச்ச நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு விளைச்சலும் 25 சதவீதம் அளவு குறையக்கூடும். பல்வேறு காரணங்களால், விவசாய வேலைகளுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வாழைக்கன்று நடுதல், களை எடுத்தல் பணிகளை ஒப்பந்த முறையில் செய்ய வேண்டியுள்ளது. மேலும், பருவநிலை மாற் றத்தால் பல்வேறு நோய்கள் பயிர்களை தாக்கியுள்ளதாலும், அதிக பணம் செலவாகிறது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment