இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கைகோவை மாவட்டம் "துடியலூரில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் ட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது. துடியலூர், பன்னிமடையில் எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை விவசாயிகள் மன்ற துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, மன்றத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். பன்னிமடை ஊராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். "யூனியன் பாங்க் ஆப் இந்தியா' மண்டல மேலா ளர் பத்மநாபன் சங்கத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல, மன்றத்தின் சார்பில் ஒன்பது லட்ச ரூபாய் செலவில் டிராக்டர் வாங்க முடிவானது. துடியலூர் வட்டாரத்தில் விவசாய விளைபொருட்களை பாதுகாக்க, அரசு மானியத்துடன் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்கள், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கவும், விற்பனை மையம் துவக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நிகழ்ச்சியில், "நபார்டு பாங்க்' மண்டல உதவி பொது மேலாளர் சுரேஷ், கனரா பாங்க் மேலாளர் பாலசந்தர், வேளாண் உதவி இயக்குனர் வசந்தரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மன்ற செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment