துல்லிய பண்ணை திட்டத்திற்கு கூடுதலாக நிதி வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
7:10 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, துல்லிய பண்ணை திட்டத்திற்கு கூடுதலாக நிதி வேண்டும் 0 கருத்துரைகள் Admin
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கிணறு மற்றும் போர்வெல் ஆதாரங்களுடன் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயிர் சாகுபடிக்காக நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய நிலையை நோக்கி செல்கிறது. எனவே, தண்ணீர் தேவையை குறைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், கூடுதல் விளைச்சல் பெறவும் வேளாண்துறை சார்பில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மழை அளவு குறைந்த தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக 2004 ம் ஆண்டு துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டது. கரும்பு, வாழை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதுடன், உரங்களும் வீணாகாமல் தண்ணீர் வழியாக வழங்கப்படும்.
இதனால், தண்ணீர் சிக்கனப்படுத்தப்படுவதுடன், மின்சார பயன்பாடும் குறையும். களை செடிகள் குறைந்து, பூச்சி தாக்குதலும் இருக்காது. உடுமலை பகுதியில் நீர் வள நில வள திட்டம் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் உடுமலை பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.முதற்கட்டமாக இப்பகுதியில் 6 இடங்களில் மக்காச்சோள சாகுபடி துல்லிய பண்ணை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதில், ஏக்கருக்கு 2,700 கிலோ சராசரி விளைச்சல் 4, 200 கிலோ வரை விளைச்சல் வரை உயர்ந்தது.குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் துல்லிய பண்ணைதிட்டத்திற்கு ஆர்வம் காட்டினர். ஆனால், அரசு சார்பில் குறைந்தளவு மானியமே இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. பாசன சங்கங்களின் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் 5 ஏக்கர் வரை மட்டுமே மானியம் ஒதுக்கப்பட்டது. மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், தண்ணீர் உரம் கலக்கும் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டில் உடுமலை பகுதியில் துல்லிய பண்ணைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவாகவே உள்ளது. பல லட்சம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளப்படும் உடுமலை பகுதியில் துல்லிய பண்ணைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரும்பு, வாழை, மக்காச்சோள பயிர்களில் இந்த திட்டத்தை அதிகளவு செயல்படுத்தினால், பல லட்சம் லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். உடுமலை பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி அரசு நிதி ஒதுக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, துல்லிய பண்ணை திட்டத்திற்கு கூடுதலாக நிதி வேண்டும்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது