இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை எச்சரிக்கை


கரும்பு பயிரிடும் விவசாயிகள் வெல்லம் காய்ச்சுவதற்கு கரும்புகளை கொடுக்கக்கூடாது என சர்க்கரை ஆலை நிர்வாகம் எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் உட்பட பல இடங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் உடுமலைப்பேட்டை அமராவதி சர்க்கரை ஆலையில் பதிவு செய்து, தங்கள் கரும்புகளை விற்று வருகின்றனர்.



இந்நிலையில் கரும்பு ஆலையில் பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின் றனர். இதனால் பழநி பகுதியில் பல இடங்களில் வெல்லம் தயாரிக்கும் தொழில் நடக்கிறது. இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு ஆலையில் பதிவு,பதிவு செய்யாத விவசாயிகள் தாங்கள் பயிரிடும் கரும்புகளை வெல் லம் தயாரிக்க வழங்கக் கூடாது என்று அனைத்து விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.



விவசாயிகள் கூறியதாவது: அமராவதி கூட்டுறவு ஆலையில் கரும்புக்கு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வேண்டுமானால் கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால் பதிவு செய்யாத விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புவது கண்டிக்கதக்கது. இது குறித்து கலெக்டர் வள்ளலாரிடம் புகார் தெரிவித்துள்ளோம். சர்க்கரை ஆலை நிர்வாகம் அளித்த நோட்டீசையும் காண்பித் துள்ளோம். கலெக்டர், சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment