இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரக விதை


கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப் பட்டது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2009-2010 ஆண்டிற்கு புவனகிரி வட்டாரத்தில் மிளகாய் புதிய பரப்பு 10 எக்டர், வாழை புதிய பரப்பு 10 எக்டேர், கொய் மலர்கள் புதிய பரப்பு 2 எக்டர், மா புதிய பரப்பு 1 எக்டர், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் 20 எக்டர் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு வாழைக்கு 7500, மிள காய்க்கு 11,250, கொய்மலர்களுக்கு 12,000 ரூபாயில் இடு பொருட் கள் வழங்கப்படுகிறது. புவனகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மிளகாய் புதிய பரப்பின் கீழ் புவனகிரி வட்டார விவசாயிகள் 53 பேருக்கு வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப்பட்டது. தோட் டக் கலை உதவி இயக்குனர் சந்திரமோகன் வழங் கினார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் பாரி, வினோத், விவசாயிகள் அண்ணாமலை, ராஜேந்திரன், தமிழ்மணி, வீரமுத்து, அரிகரன், ரவிச்சந் திரன் பங்கேற்றனர்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment