இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வறண்டு கிடக்கிறது பெரும்பள்ளம் அணை: மழைக்கு ஏங்கும் டி.என்.பாளையம்விவசாயிகள்

ஈரோடு மாவட்டம் பெரும்பள்ளம் அணை வறண்டு கிடப்பதால், விவசாயிகள் மழை வருமா என காத்து கிடக்கின்றனர்.தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் அருகேயுள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பெரும்பள்ளம் அணையை நம்பி விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். மலை முகடுகளுக்கு நடுவே, இயற்கை அழகுடனும் அமைதியுடனும் எந்தநேரமும் காட்சிதரும் பெரும்பள்ளம் அணை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயற்கை அழகை கண்குளிர காண்பதற்கென்றே பயணிகள் படையெடுத்து வருவதுண்டு; அணையின் மறுகரையில் வன விலங்குகள் நீர் அருந்த வருகின்றன.இந்த அணை 1,888 மீட்டர் நீளமும், 115.80 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. பெரும்பள்ளம் அணையால் 1,030 எக்டேர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டு தலை மதகுகளை கொண்ட இந்த அணை, வலதுபுற கால்வாய் இடதுபுற கால்வாய் என இரு பிரிவுகளாக பிரிகிறது. வலதுபுற கால்வாய் 551.95 எக்டேர் பாசனவசதி பெறுகின்றன. கால்வாயின் நீளம் 6.35 கி.மீ., இடதுபுற கால்வாய் 498.375 எக்டேர் பாசனவசதி பெறுகின்றன. கால்வாயின் நீளம் 7.250கி.மீ.


கெம்பநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள், மரவள்ளி, வாழை, கரும்பு போன்றவை பயிரிடப்படுகின்றன. இங்கு வெங்காயம் பெயரளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகளுக்கு தண்ணீர் ஆதாரம் என்றால் அது பெரும்பள்ளம் அணைதான். தற்போது அணை பரிதாப நிலையை அடைந்து விட்டது. இயற்கை அழகை வாரி இறைத்த அணைக்கட்டு பொழிவற்று காணப்படுகிறது. அணையை நம்பியுள்ள 1,030 எக்டேர் பாசன பரப்பு வறண்டு கிடக்கின்றன. பெரும்பள்ளம் அணை தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது.


இதனால், விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. நிலத்தடி நீர் ஊறியதால் 2006 முதல் 2009 வரை விவசாயிகள் சமாளித்து வந்தனர். ஆனால், இந்தாண்டு மிகவும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றத்தால் கருகிய வெங்காயம் பயிர்களினால் பெருத்த நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள், இந்த முறை அணையும் தண்டித்துவிட்டதால் மிகவும் கவலையில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment