.வெங்காய விவசாயிகளுக்கு நஷ்டம்
6:13 AM .வெங்காய விவசாயிகளுக்கு நஷ்டம், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
ஈரோடு மாவட்டம் கெம்மநாயக்கன்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. வெங்காய செடிக்கு அதிக குளிரும், அதிக வெப்பமும் ஒத்து போகாது. பருவநிலை மாற்றத்தால் வெங்காய செடிகள் கருகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. கார்த்திகையில் நட்ட வெங்காய செடிகளை 90 நாள் விளைச்சலுக்கு பின் மாசி மாதம் அறுவடை செய்தனர். பல ஏக்கர் செடிகளை இழந்து விட்டாலும் மீதமுள்ளவற்றை ஆறுதலுக்காக அறுவடை செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது.
ஒரு ஏக்கர் வெங்காய விளைச்சலுக்கு 30 ஆயிரம் செலவாகியது. அறுவடைக்கு வரும் கூலியாட்களுக்கு ஒரு நாள் கூலி 100 ரூபாய். செலவு செய்தும் அறுவடையின் போது நஷ்டம் தான் மிஞ்சுகிறது. வெளியூரில் இருந்து வரும் தரகர்கள் வெங்காயம் சிறுவெட்டாக இருந்தால் கிலோ ஐந்து ரூபாய்க்கும், பெரியவையாக இருந்தால் ஏழு ரூபாய்க்கும் குறைந்த விலை பேசி வாங்கி செல்கின்றனர்.
குறிச்சொற்கள்: .வெங்காய விவசாயிகளுக்கு நஷ்டம், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது