இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொடைக்கானலில் காபி கொட்டை மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் பகுதியில் காபி கொட்டை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.​ ​ கொடைக்கானல் மலைப் பகுதியானது மேல்மலை மற்றும் கீழ்மலை,கொடைக்கானல் நகரம் என பிரிக்கப்பட்டுள்ளது.​ மேல்மலைப் பகுதியிலும் கொடைக்கானல் பகுதிகளிலும் காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.​ கீழ்மலைப் பகுதியில் ஆரஞ்சு,​​ காபி,​​ கொய்யா,​​ மலை வாழை பயிரிடப்படுறது.​ ​ ​ முக்கியமாக பண்ணைக்காடு,​​ தாண்டிக்குடி,​​ கே.சி.பட்டி,​​ கடுகுதடி,​​கும்பரையூர்,​​ பெரியூர்,​​ சின்னூர் உள்பட 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது.​ ​ தற்போது காபி அதிக அளவில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து அறுவடை காலம் முடியும் நிலையில் காபி கொட்டையைப் பதப்படுத்தி அதனை விற்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.​ ​ சில வாரங்களுக்கு முன் சர்வதேச மார்க்கெட்டில் காபி கொட்டை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150-க்கு விற்பனையானது.​ இந்த நிலை படிப்படியாகக் குறைந்து ரூ.130-க்கு விற்கப்பட்டு வருகிறது.​ ​ ​ ஆரம்பத்தில் விலையேற்றம் இருந்ததால் மேலும் விலை உயர்வை எதிர்பார்த்து காபி கொட்டையை விவசாயிகள் இருப்பு வைத்திருந்ததால் விலை குறையும் பட்சத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர்.​ ​ ​ கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காபி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருவதாலும்,​​ அதற்கென காபி வாரியம் இருந்தும் எந்த பயனும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.​ எனவே காபி விவசாயிகளை ஊக்கப்படுத்தவும்,​​ மேலும் அதிக காபி விளைச்சல் பெறுவதற்கும்,​​ கொடைக்கானல் மலைப் பகுதியில் காபி கொட்டை விலையை நிர்ணயிப்பதற்கும் மார்க்கெட் மையம் அமைக்க காபி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காபி விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.​ ​ இதைத் தொடர்ந்து இப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாயப் பொருள்களை விற்பதும் அவற்றின் வருமானத்தைப் பாதுகாப்பாக வைக்க கீழ்மலைப் பகுதியில் வங்கிகள் இல்லாதது சிரமமாக உள்ளது.​ ​ 1981-ம் ஆண்டு தாண்டிக்குடி பகுதியில் செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கி 2001-ல் மூடப்பட்டதால் இந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறும் அரசுப் பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.​ ​ இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியது:​ ​ கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு ​ சுமார் ​ 45 கி.மீ.​ தூரம் உள்ள கொடைக்கானல்,​​ ஆடலூர் பகுதி வங்கிகளில் கடன் வழங்க மறுக்கின்றனர்.​ எங்களது சேமிப்புகளை செலுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது.​ ​ இதனால் கீழ்மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் கணக்குகளை திண்டுக்கல்,​​ அய்யம்பாளையம்,​​ மதுரை போன்ற இடங்களில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.​ ​ ​ எனவே மாவட்ட நிர்வாகம் ​ கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் விரைவில் வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரி வருகின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment