இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அறுவடை தொடக்கம்

திருச்செந்தூர்,​​ தென்திருப்பேரை வட்டாரத்தில் பிசான பருவ நெல் பயிர் அறுவடைப் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.​ இப் பகுதியில் கடந்த நவம்பர்,​​ டிசம்பர் மாதங்களில் பயிர் செய்த பிசான நெல் பயிர் தற்போது அறுவடை துவங்கி உள்ளது.​ திருச்செந்தூர் வட்டத்தில் செல்லப்பொன்னி என்ற ஆடுதுறை 43 ,​​ ஆடுதுறை 45,​ ஆடுதுறை 47,​ வெள்ளை சம்பா என்ற அம்பை 16,​ கட்ட சம்பா என்ற டிகே.எம் 9 என்ற நெல் பயிர்கள் பயிர் செய்திருந்தனர்.​ தற்போது இப்பிசான பருவ அறுவடைப் பணி நல்லூர்,​​ மூலக்கரை,​​ கானம்,​​ வீரமாணிக்கம்,​​ அம்மன்புரம்,​​ சோனகன்விளை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.​ சுமார் 1400 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடைபெற்று பத்து சதவீதத்துக்கு மேல் அறுவடை நடைபெற்றுள்ளது.​ சராசரியாக ஒன்றரை மேனி வரை மகசூல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.​ தென்திருப்பேரை வட்டாரத்தில் சுமார் 3000 ஹெக்டேரில் ஆடுதுறை 43,​ ஆடுதுறை 45,​ அம்பை 16,​ ஆடுதுறை 36 ஆகிய நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.​ இதில் பத்து சதவீதம் அறுவடை நடைபெற்றுள்ளது.​ தற்போது தென்திருப்பேரை வட்டாரத்தில் வெள்ளமடம்,​​ நாசரேத்,​​ உடையார்குளம்,​​ ஆவ்வார்திருநகரி,​​ ஆதிநாதபுரம்,​​ குருகாட்டூர் மற்றும் ராஜபதி உள்ளிட்ட பகுதியில் அறுவடை நடைபெற்று வருகிறது.​ ஒன்றரை மேனி அதாவது ஒரு ஹெக்டேருக்கு சுமார் 6075 கிலோ வரை மகசூல் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.​ படைப்புழு தாக்கிய பகுதிகளில் 5 சதவீதம் வரை மகசூல் குறைந்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.​ இப் பகுதியில் சுமார் ஒரு மாதம் வரை அறுவடைப் பணி நீடிக்கலாமென தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment